--- --:--:-- --

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய்..!

19

புதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

 

கனமழை காரணமாக வெள்ளக்காரி வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அசினா பேகம் என்ற பெண் உயிரிழந்ததை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழிசை இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

அந்த பெண்ணின் குடும்பத்திற்கு கருணை தொகையாக 4 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் அந்த பெண்ணின் பிள்ளைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் எனவும் துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon