--- --:--:-- --

இன்று சேலம் வருகிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

13

சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

குறிப்பாக பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சி தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் அடுத்தடுத்த தமிழகம் வந்துள்ளனர்.

 

இந்த வரிசையில் சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார் அவர் தனி விமானம் மூலம் சேலம் வரும் நிலையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon