விமானத்தின் இறக்கை மின்கம்பத்தில் மோதியதால் பரபரப்பு..!
இரவில் ஓடும் பாதையில் இருந்து விலகிய விமானத்தின் ரெக்கை மின்கம்பத்தில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயவாடாவில் உள்ள விமான நிலையத்திற்கு அரபு நாட்டிலிருந்து ஏர் இந்தியா நிறுவனம் 64 பயணிகளுடன் வந்துள்ளது.
இந்த விமானம் தரையிறங்கும் போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடு பாதையை விட்டு விலகி உள்ள போது விமானத்தின் வலது பக்க கை ஓடுபாதையின் ஓரமாக இருந்த மின்கம்பத்தில் மோதி சேதம் அடைந்துள்ளது.
மின்கம்பம் கீழே சாய்ந்த நிலையில் பைலட் தலைமையால் வெறும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் 64 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.






