--- --:--:-- --

அவினாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாத்ரூம், கழிவறைகளை தூய்மைப்படுத்திய திருப்பூர் நிழல் அறக்கட்டளை குழுவினர்..!

1.1

திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகில் உள்ள ஆத்துப்பாளையத்தில் செயல்பட்டு வரும் திருப்பூர் நிழல் அறக்கட்டளை குழுவினர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் சுகாதார நலன் கருதி பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை இலவச சேவையாக சுத்தம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

 

இதனைதொடர்ந்து அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாத்ரூம் மற்றும் கழிவறைகளை சுத்தப்படுத்தும் பணியை செய்தனர்.

இதற்காக திருப்பூர் நிழல் அறக்கட்டளை நிறுவனர் தெய்வராஜ் தலைமையில் பொருளாளர் சிவகாமி முன்னிலையில் உறுப்பினர்கள் சண்முகராஜ், செல்வராஜ், ஜோதி, சுந்தரம், செல்வகுமார், லோகநாதன், ரமேஷ் பட்டேல் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பள்ளி வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளி கழிப்பறை மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் 3 கழிப்பறைகள், மாணவிகளின் 12 கழிப்பறைகள் என 16 கழிப்பறைகளை பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தமாக கழுவினர்.

 

மேலும் கழிப்பறை கட்டிடத்தின் மேல் இருந்த ஒட்டடைகளை அடித்து சுத்தப்படுத்தியும், கழிப்பறைகளின் வெளிப்பகுதியில் உள்ள குப்பைகளையும் அகற்றினர்.

இப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் திருப்பூர் நிழல் அறக்கட்டளை தெய்வராஜின் மகள் திவ்யாவும் இந்த சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இவர்களது பணியை பள்ளி தலைமையாசிரியை ( பொறுப்பு ) திலகவதி ஆசிரியர் ஆசிரியைகள் மாணவிகள் வாழ்த்தி பாராட்டினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon