--- --:--:-- --

அமிதாபச்சன், அக்ஷய்குமார், சல்மான்கானின் படங்களை திரையிட விடமாட்டோம்..!

11

மிதாபச்சன், அக்ஷய்குமார், சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் படங்களை திரையிட விட மாட்டோம் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா பெடோலி மிரட்டல் விடுத்துள்ளார்.

 

விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர்கள் நிற்காமல் மத்திய அரசுக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவு போட்டதாகவும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது குறித்து இவர்கள் எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக தொடர் பதிவுகள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக நாட்டு மக்களின் மதிப்பைப் பெற்று கலைஞர்களை அவமதிப்பதாக சாடியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon