ஒரு நிமிடத்தில் 26 செயல்களை செய்த பூனை கின்னஸ் சாதனை..!
ஆஸ்திரியாவில் தனது எஜமானியின் சொல் பேச்சை கேட்டு ஒரு நிமிடத்தில் 26 செயல்களை செய்த பூனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. தனது 11 வயதில் இருந்து பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார் ஒரு சிறுமி .
சிறுவயதிலிருந்தே பூனையோடு நேரம் செலவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அனிகா தான் சொல்வதையெல்லாம் கேட்டு புரிந்து கொண்டு செயல்படும் அளவிற்கு பூனைக்கு பயிற்சியும் அளித்துள்ளார்.
அனிகாவின் சொல்பேச்சு கேட்டு கை கொடுப்பது, மணியடிப்பது பெயரை வைத்து பொருட்களை சரியாக கண்டுபிடிப்பது உள்ளிட்ட 26 செயல்களை ஒரு நிமிடத்தில் செய்து பூனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.






