--- --:--:-- --

தமிழகத்தில் எரிவாயு திட்டங்களுக்கு நாளை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்..!

4

மிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை திட்டங்களுக்கு நாளை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இந்த நிகழ்ச்சி நாளை மாலை 4.30 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ராமநாதபுரம், தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு சென்னை – மணலி பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் எரிபொருளில் கந்தகத்தை நீக்குதல் பிரிவு ஆகியவற்றை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இது தவிர நாகையில் அமையவிருக்கும் காவிரிப்படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருப்பதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இதன் வாயிலாக சமூக பொருளாதாரப் பயன்கள் அதிகரித்து தற்சார்பு நிலையை நோக்கி நாடு நடை போட முடியும் எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon