--- --:--:-- --

செவ்வாய் கிரகத்திற்கு பொருத்தமான உணவுகளை கண்டுபிடித்து தருவோருக்கு 5 லட்சம் டாலர் பரிசு..!

7

செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவர்களின் பயணத்தின்போது பொருத்தமான உதவியான உணவுகளையும் அவற்றுக்கான தயாரிக்கும் முறைகளையும் கண்டுபிடித்துக் கூறினால் 5 லட்சம் டாலர் பரிசு வழங்குவதாக நாசா அறிவித்துள்ளது.

 

வரும் மே மாதம் 28 வரை பெயரை பதிவு செய்து ஜூலை 30க்குள் தங்களது கண்டுபிடிப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டும் என நாசா தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்கர்களுக்கு மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

இதர நாடுகளை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். ஆனால் பரிசு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மிகவும் அதிக கலோரிகளை கொண்ட சக்லட் பார்கள் விண்வெளி வீரர்களால் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon