--- --:--:-- --

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிவடைந்துள்ளது..!

9

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

 

இன்றைய நிலவரப்படி கிராம் தங்கம் 41 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 483 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 328 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 864 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் கிராமுக்கு 20 காசுகள் சரிந்து 73 ரூபாய் 50 காசுக்கும் கிலோ வெள்ளி 200 ரூபாய் குறைந்து 73 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon