--- --:--:-- --

கவர்ச்சி நடிகை சன்னி லியோனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை..!

2

29 லட்சம் ரூபாய் நிதி மோசடி வழக்கில் நடிகை சன்னி லியோனை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் இருபத்தி ஒரு லட்சம் ரூபாயை சன்னி லியோன் பெற்றதாக கூறப்படுகிறது.

 

நிகழ்ச்சி நடைபெறும் நாள் பல முறை மாற்றப்பட்டதால் ஒப்புக்கொண்ட தொகையில் மேலும் 12 லட்ச ரூபாயை கொடுக்காததால் இறுதிவரை சன்னிலியோன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சன்னி லியோன் மீது கேரள காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

 

இந்த வழக்கில் சன்னி லியோனும், அவர் கணவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் சன்னிலியோனை கைது செய்ய தடை விதித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon