--- --:--:-- --

தவறவிட்ட கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த காவலர்..!

13

சென்னையை அடுத்த ஆவடியில் மேம்பாலத்தின் கீழே பணம் நகையுடன் தவறவிட்ட கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த காவலரை சென்னை ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

பட்டாபிராம் மேம்பாலத்துக்கு கீழேசு மதி வெங்கடேசன் தம்பதியினர் தங்களுடைய கைப்பையை தவறவிட்டு உள்ளனர். இந் நிலையில் பட்டாபிராம் பகுதியில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் செல்வகுமார் என்பவர் மேம்பாலத்தின் கீழே செல்லும் போது கேட்பாரற்று கிடந்த கைப்பையை எடுத்து உடனடியாக உரியவரிடம் ஒப்படைத்ததில் இரண்டு சவரன் நகை, பத்தாயிரம் ரூபாய் மற்றும் நிலப் பத்திரம் இருந்தது.

 

இந்நிலையில் உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை செல்வகுமார் நேரில் அழைத்து பாராட்டிய ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவரை கௌரவித்து பாராட்டு சான்றிதழ் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon