மூன்று மாதங்களில் செவ்வாய்க்குச் செல்லும் திறன் படைத்த ராக்கெட்..!
விண்வெளி வீரர்களுடன் மூன்று மாதங்களில் செவ்வாய்க்குச் செல்லும் திறன் படைத்த அணுசக்தி ராக்கெட் விண்வெளியில் ஏவப்படும் வடிவமைப்பைக் கொண்டது என அமெரிக்காவைச் சேர்ந்த யுஎஸ்என்சி டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2035 ஆம் ஆண்டுக்குள் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப இலக்கு வைத்துள்ள நாசா பயண காலம் ஐந்து முதல் ஒன்பது மாதத்திற்குள் இருக்க வேண்டும் என திட்டமிடுகிறது. இந்த நிலையில் அறிவிப்பு அணு எரிபொருளை பயன்படுத்தி மூன்று மாதத்தில் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வகையில் ராக்கெட்டை எஞ்சினை தயாரித்து இருப்பதாக யுஎஸ்என்சி டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ராக்கெட் பூமியிலிருந்து ஏவப்படாது என்றும் வழக்கமான ராக்கெட் மூலம் பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன்பிறகு அங்கிருந்து செவ்வாய்க்கு ஏவப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தாலும் அணு உலையின் சிதறல்கள் பூமி மீது விழாது என்றும் யூனிடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.






