கட்சி தொடங்கப்போவதாக கூறியுள்ள ரஜினியின் ஆதரவாளரான அர்ஜுன மூர்த்தி..!
சிறப்பான நேர்மையான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய அரசியல் கட்சியைத் தொடங்க விருப்பதாக ரஜினியின் ஆதரவாளரான அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரஜினியின் பெயர், படத்தை பயன்படுத்தப் போவதில்லை என்று கூறினார். தன்னுடைய சித்தாந்தத்தில் நம்பிக்கை இருந்தால் தன்னுடைய கட்சியில் ரஜினி ரசிகர்கள் இணைந்து கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்தார்.






