தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிக்கும் புதிய படம்..!
ராணா படத்தின் கதையை மீண்டும் கேட்ட நடிகர் ரஜினிகாந்த் அதில் நடிக்க இப்போதும் விருப்பத்துடன் இருப்பதாக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தை தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் தயாரிக்கும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அதில் நடிக்கவும் செய்கிறார். பிக் பாஸ் தர்ஷன், லாஸ்லியா ஆகியோரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கமல்ஹாசனுக்கு ஒரு கதையை சொல்லி இருப்பதாகவும் அதற்கு பஞ்சதந்திரம் 2 எனும் தலைப்பு பொருத்தமாக இருக்கும் எனவும் கேஎஸ் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.






