சித்ராவின் தற்கொலை வழக்கில் வெளிவந்த புதிய தகவல்..!
சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். காவல் ஆய்வாளர் அதில் தற்கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நடிகையாக தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதித்தவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா. இவர் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தற்கொலைக்கு கணவர் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் டிசம்பர் 16ம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.
இந்த விவகாரத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென்று முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்தார் சித்ராவின் தாயார் . அப்போதுதான் இந்த வழக்கு நசரத்பேட்டை காவலர்களிடம் இருந்து சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணையும் துரிதப் படுத்தப் பட்டது.
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக காவல் ஆய்வாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அது வெளியாகி இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் தற்கொலைக்கான காரணத்தை கொண்டு வந்துள்ளது.
கணவர் சித்ரா நடத்தையில் கொண்ட சந்தேகமே அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான பிரதான காரணம் என்று கூறியிருக்கிறது காவல்துறை. வழக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கும் நிலையில் அதுதொடர்பாக வந்தபிறகும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.






