பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்களின் பெற்றோரிடம் நாளைக்குள் கருத்து கேட்க தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகுபள்ளிகள் திறப்பு குறித்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்கப்படுகிறது.
இன்று முதல் 8ஆம் தேதி வரை பெற்றோரிடம் கருத்து கேட்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் ஒருநாள் முன்னதாகவே கருத்துகளை பெற பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர்களிடம் பெறப்பட்ட அறிக்கையை தொகுத்து எட்டாம் தேதி காலை 10 மணிக்குள் சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரொனா காரணங்களால் கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட வில்லை.
இந்த நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டி இருப்பதால் விரைவில் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளை திறக்கலாமா என மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
இதற்காக நாளொன்றுக்கு 100 பெற்றோர்களுக்கு அந்தந்த பள்ளிகள் அழைப்பு விடுத்துள்ளன. பெற்றோர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைப்பர்.
அவர்கள் அதனை அறிக்கையாக தொகுத்து எட்டாம் தேதி காலை 10 மணிக்குள் பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.