புத்தாண்டை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகைப்பூ 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை..!

புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி பூ சந்தையில் மல்லிகை பூவின் விலை வரலாறு காணாத அளவுக்கு கிடுகிடுவென உயர்த்தி தங்கத்துக்கு நிகராக விற்பனை செய்யப்படுகிறது.

 

துணிவால் பூக்களின் வரத்து குறைந்து உள்ள நிலையில் பண்டிகை காலம் என்பதால் அதன் தேவை அதிகரித்துள்ளதுஒரு கிலோ மல்லிகை பூ 6 ஆயிரம் ரூபாய்க்கும் கனகாம்பரம் 4 ஆயிரம் ரூபாய்க்கும் பிச்சிப்பூ கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

 

ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளிலிருந்து அழகிய ரோஜா பூக்கள் விற்பனைக்காக வந்து உள்ளதோடு விலையை பொருட்படுத்தாமல் மக்கள் பூக்களை வாங்கி செல்கின்றனர்.


Leave a Reply