மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெண்ணாக இருந்தாலும் தைரியமான பெண்ணாக இருந்தார் என்று அவர் எப்படி இறந்தார் என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஆலந்தலை கிராமத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு குழுமியிருந்த மக்களிடம் பேசியுள்ளார் .
பெண்கள் இங்கு கட்டுப்பாடாக அமைதியாக வந்து அமர்ந்திருப்பதைப் பார்க்கும் போது வரவிருக்கும் தேர்தலில் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம் என்று உறுதி அளிக்கிறது என தெரிவித்தார் . விளம்பரத்தில் தமிழ்நாடு எல்லாத்துறையிலும் முதலிடத்தில் உள்ளது என்று போட்டுள்ளனர்.
ஆனால் தற்போது ஊழலிலும் கொலை, கொள்ளை அடிப்பதிலும் தான் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக கூறினார். ஜெயலலிதா பெண்ணாக இருந்தாலும் தைரியமான பெண்ணாக இருந்தார்கள் என்றும் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா இறந்தது குறித்து விசாரித்து அவர்கள் இறப்பிற்கு காரணம் யார் என்று கண்டுபிடித்து அவர்களை கூண்டில் நிற்க வைத்து தண்டனை வழங்குவோம் எனவும் உறுதியளித்தார்.