பிரத்யேக சரக்கு போக்குவரத்து சேவையை பிரதமர் துவக்கி வைத்தார்..!

பாஜக ஆட்சியில் அனைத்து மட்டத்திலும் சீரமைப்புகள் நடைபெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பாகுபூர்- கூர்ஜா இடையேயான பிரத்யேக சரக்கு போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

காணொளி வாயிலாக பங்கேற்று பேசிய பிரதமர் மோடி பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பணிகள் மேற்கொள்ளப்படும் விதம் மாறி உள்ளது என்றார்.

 

2014ஆம் ஆண்டு வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட பிரத்தியேக சரக்கு போக்குவரத்து சாலை அமைக்கப்படவில்லை என்றும் பாஜக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்ட போது அதற்கான செலவினங்கள் 11 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

 


Leave a Reply