வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை..!

2020 – 2021 ஆம் மதிப்பீடு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை வரும் மார்ச் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை மக்கள் மன்றம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

 

இதுதொடர்பாக சென்னை மக்கள் மன்றம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் கொரொனா காரணமாக வரி தணிக்கையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிக்கும் வருமான வரி தாக்கலை அடுத்தாண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

 

அதேபோல ஜிஎஸ்டி தாக்கலுக்கான கால அவகாசம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதன் காலக்கெடுவை 2021 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளது.

 

இந்த நிலையில் 2020 – 2021 மதிப்பீட்டு ஆண்டில் 4 கோடியே 15 லட்சம் பேர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக 2020 – 2021 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வரும் டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.


Leave a Reply