விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 33வது நாளாக நீடிக்கிறது..!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 33வது நாளாக நீடிக்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்டவைகளுக்கு பாதகமாக அமைந்து இருப்பதாக கூறி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

 

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசுடன் நடந்த ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.


Leave a Reply