பிரசாத் ஸ்டுடியோவுக்கு இளையராஜா இன்று செல்கிறார்..!

தியானம் செய்துவிட்டு இசைக்கருவிகளை எடுப்பதற்காக பிரசாத் ஸ்டுடியோவுக்கு இளையராஜா இன்று செல்கிறார். பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு பகுதியை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இளையராஜா ரெக்கார்டிங் தியேட்டர் ஆக பயன்படுத்தி வந்தார்.

 

இந்த நிலையில் அந்த அரங்கை பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இளையராஜாவிடம் இருந்து திருப்பி கேட்டது. அதில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் பிரசாத் ஸ்டுடியோவில் வைத்திருக்கும் இசை குறிப்புகளையும், பொருட்களையும் எடுத்து கொள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா அனுமதி கோரியிருந்தார்.

 

அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கும் நிலையில் இன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி காலை இளையராஜா ஸ்டுடியோவிற்கு செல்ல உள்ளார்.


Leave a Reply