ஒரு கிலோ டீத்தூள் 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது..!

நீலகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ டீத்தூள் 54 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனையாகிறது. ரெட் வெல்வெட் டீத்தூளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

 

உயர்ரக தேயிலை கொழுந்தை கைகளால் தேர்ந்தெடுத்து பறித்து தனிச் சிறப்பான முறையில் உலர்த்தி இந்த தேயிலைத்தூள் தயாரிக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட வகை தேயிலை கொழுந்து ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ மட்டுமே கிடைக்கும் என்பதாலும் பிரத்யேகமான பக்குவத்தில் தயாரிக்கப்படும் எனவும் தனிச் சிறப்பான மருத்துவ குணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

 

ஒரு கிலோ டீத்தூள் 54 ஆயிரம் ரூபாய் ஆயிரம் என்பதால் , சுற்றுலா பயணிகள் ஒரு கிராம் 54 ரூபாய் என்ற சிறு பாக்கெட்டுகளில் கிடைப்பதால் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.


Leave a Reply