ஆம்புலன்சிலே இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய்..!

த்தியமங்கலம் அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கர்ப்பிணி ஒருவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

 

மார்க்கம் பாளையம் மலை கிராமத்தை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

 

அதிகாலையில் அடர்ந்த காட்டுப் பகுதியில் சென்றபோது அவருக்கு வேதனை அதிகரித்ததால் மருத்துவ உதவியாளர் தேவராஜ் ஆம்புலன்சில் பிரசவம் பார்த்துள்ளார். முதலில் பெண் குழந்தை 20 நிமிடங்களுக்கு பின் ஆண் குழந்தை என இரட்டை குழந்தைகளை அமுதா சுகப்பிரசவமாக ஈன்றெடுத்தார்.

 

இரட்டை குழந்தைகளும் தாயும் கடம்பூர் ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் பிரசவம் பார்த்த தேவராஜ் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கோகுல கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.


Leave a Reply