கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சிக்கு செல்ல இன்று முதல் ( டிசம்பர் 27 ) பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி.சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி !!!

கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களுக்கு
சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று முதல் ( டிசம்பர் 27 ) கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சி திறக்கப்படவுள்ளதாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

 

கோவை குற்றாலம் சிறுவாணி மலைத்தொடர்களில் தோன்றும் மென்மையான நீர்வீழ்ச்சியுடன் அழகிய இடமாகவும் உள்ளது. கோவையிலிருந்து 35 கி.மீ.தொலைவில் நகரத்தின் மேற்கே மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரில் அமைந்துள்ளது.

 

வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த நீர் வீழ்ச்சியின் மேல் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு வர வனத்துறை அனுமதி பெற வேண்டும். நகரிலிருந்து பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.இந்த பகுதிக்கு செல்ல மாலை 5 மணிக்கு பிறகு அனுமதி இல்லை.

 

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோவையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் போதிய நீர்வரத்து இருந்தும் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் கோவை குற்றாலம் திறக்கப்பட உள்ளது.

 

இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில் ”கோவை குற்றாலத்துக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் நுழைவுக் கட்டணம் செலுத்தும் முன் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.

 

முகக்கவசம் இல்லாமல் வருபவர்கள் டிக்கெட் கவுண்டரில் விற்கப்படும் முகக்கவசத்தை வாங்கி அணிந்து கொண்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும்,சாடிவயலில் இருந்து கோவை குற்றாலம் செல்லும் வாகனத்தில் ஏறும் முன்பும் ஒவ்வொரு பயணிக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.

 

பின்பு, சானிடைசரைக் கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே வாகனத்தில் அனுமதிக்கப்படுவர். இந்த விதிகளைக் கடைப்பிடித்து சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply