வீரமங்கை வேலுநாச்சியாராக நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படம்..!

ங்கிலேயருக்கு எதிராக வாள் ஏந்தி போராடிய முதல் தமிழ் பெண் என்ற பெருமையைப் பெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் ஆக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

17ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட வேலுநாச்சியார் கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரையேற்றம், யானையேற்றம் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர்.

 

அண்மைகாலமாக வரலாற்று சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கூடி வருவதால் அதுபோன்று படங்களை இயக்குவதில் இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

 

அந்தவகையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் திரைப்படத்தை இயக்குனர் சுசிகணேசன் இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் வேலுநாச்சியாராக நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply