--- --:--:-- --

கோவையில் அம்மா மினி கிளினிக்: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார் !!!

3.2

கோவை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் சிங்காநல்லூர் மற்றும் சிவானந்தா காலனியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். பின்னர், ரூபாய் 2000 மதிப்பிலான அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களை 11 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:- கோவை மாவட்டத்திற்கு 70 கிளினிக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 5 நடமாடும் கிளினிக்குகள் ஆகும். கோவைக்கு முதற்கட்டமாக மாநகர பகுதி ஏழு கிளினிக்குளும்,ஊரகப் பகுதிகளில் 30 மினி கிளினிக்குகளும் திறக்கப்பட உள்ளது. அதன்படி சிங்காநல்லூர், நெசவாளர் காலனி சிவானந்தா காலனி, பகுதி ஆகிய பகுதிகளில் அம்மா கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

 

அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவமனை பணியாளர் ஆகியோர் பணிபுரிவார்கள். சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் அம்மா மினி கிளினிக்குகள் செயல்படும்.

 

பார்வை நேரத்தை பொறுத்தவரை கிராம பகுதி மற்றும் பேரூராட்சிகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும். மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மேலும் கூடுதலாக ஒரு மணி நேரம் அதாவது இரவு 8 மணி வரை செயல்படும். மினி கிளினிக்கில் மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் உடனுக்குடன் மருந்து மாத்திரைகள் வழங்கப்படும் என பேசினார்.

 

மேலும்,கோவை மாவட்டத்தில் சுகாதார சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் வடசித்தூர், இடிகரை மற்றும் செம்மேடு ஆகிய பகுதிகளில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. வெள்ளலூர், நரசிபுரம், சமத்தூர்,நம்பர் 4 வீரபாண்டி, ஆனைகட்டி, பூச்சியூர், செட்டி பாளையம், இடிகரை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் மற்றும் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

 

அரிசிபாளையம், தாளியூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டி தரப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 12 அரசு மருத்துவமனைகள்,80 ஆரம்ப சுகாதார நிலையங்கள்,328 துணை சுகாதார நிலையங்கள் என ஒரு சிறப்பான மருத்துவ உட்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பெரிதும் பயன் அளிக்கக் கூடியதாக இருக்கும் இவ்வாறு அவர் பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.அம்மன் அர்ஜுனன், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ரமேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon