சொத்து தகராறில் அக்காவை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கை..!
சென்னையை அடுத்த மாங்காட்டில் சொத்து தகராறில் அக்காவை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கை கைது செய்யப்பட்டார். தெய்வானை என்ற 40 வயது பெண்மணி தனியாக வசித்து வந்தார். இன்று அதிகாலை அவரது வீட்டிற்கு சென்று பார்த்த லட்சுமி தெய்வானை இறந்து கிடப்பதை கண்டு மாங்காடு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது தங்கையே அக்காவை கொலை செய்தது தெரியவந்ததுது. சில ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்த தெய்வானை தனது மகனுக்கும், தங்கை லட்சுமிக்கும் பணம் அனுப்பி வந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் சென்னை வந்த தெய்வானையுடன் லட்சுமியின் கணவர் ரமேஷ் குமார் குடித்துவிட்டு தகராறு செய்ததால் லக்ஷ்மியையும், ரமேஷ் குமாரையும் தெய்வானை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். தனது சொத்தில் தங்கைக்கு பங்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவி இருவரும் நேற்று அதிகாலை தெய்வானையின் வீட்டின் பின்பக்கம் சுவர் வழியாக ஏறி குதித்து உள்ளே சென்று கத்தியால் குத்தி தெய்வானையை கொலை செய்துள்ளனர்.
தகராறில் உடன்பிறந்த அக்காவே கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கையை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள அவரது கணவர் ரமேஷை தேடிவருகின்றனர்.






