--- --:--:-- --

சூரிய கிரகணம் வானில் இன்று இரவு 7 மணிக்கு நிகழ்கிறது..!

3

2020 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் வானில் இன்று இரவு 7 மணிக்கு நிகழ இருப்பதாகவும் ஆனால் இந்தியாவில் அது தெரியாது எனவும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

 

சூரியன் மற்றும் பூமிக்கு இடையே நிலவு என மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அந்த வகையில் இன்றைய கிரகணம் சிலி, அர்ஜென்டினா போன்ற நாடுகளில் முழுமையாகவும், அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பகுதியளவும் தெரியும் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் கூறியுள்ளது.

 

இதேபோல ஜெமினான்ஸ் எனப்படும் எரிகற்கள் பொழிவும் இன்று இரவு நிகழ இருப்பதாகவும் இதனால் பூமிக்கு பாதிப்பு இருக்காது எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon