--- --:--:-- --

நடிகை சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம்..! திரைக்கு வருவதற்கு முன்பே இறந்த சித்ரா..!

5

சின்னத்திரை நடிகை சித்ரா பெரிய திரையிலும் ஒரு படத்தில் நடித்திருந்தார். கால்ஸ் என்ற அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சித்ரா இறந்துபோனது படக்குழுவினரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா டிசம்பர் 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

சித்ராவின் இறப்பில் உள்ள மர்மம் இன்னும் தீரவில்லை. சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும் கணவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 

சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கொள்ளை கொண்ட சித்ரா பெரிய திரையிலும் முதல் முறையாக ஒரு படத்தில் நடித்திருந்தார். கால்ஸ் என்ற அந்த படத்தில் சித்ரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

கடந்த ஜூலை மாதத்தில் படத்தை திரையிட கால்ஸ் படத்தின் இயக்குனர் சபரிஷ் திட்டமிட்டிருந்தார். தனக்குரிய அனைத்து காட்சிகளிலும் சித்ரா நடித்தும் கொடுத்துவிட்டார். ஆனால் கொரொனா ஊரடங்கு காரணமாக தொழில்நுட்ப பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால் ஆறு மாதங்கள் கழித்து கால்ஸ் படம் வெளியாக இருந்தது.

 

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 13ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகிறது.

 

இந்தப் படத்தில் சித்ரா உடன் இணைந்து சௌந்தரராஜன், டெல்லிகணேஷ் ,நிழல்ரவி, வினோதினி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கடைசியுமாக நடித்த திரைப்படத்தை திரையில் காணாமலேயே சித்ரா மரணமடைந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon