நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்லும் போது படகுகள் தூக்கு பாலத்தின் மீது மோதியது.!
இராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இராமேஸ்வரம் மண்டபம் பகுதிகளிலிருந்து படகுகள் அனைத்தும் குந்துகால் துறைமுகத்தில் நிறுத்த மாவட்ட நிர்வாகம் அறிவித்ததையடுத்து கடந்த ஒன்றாம் தேதி பாலம் திறக்கப்பட்ட குந்துகால் துறைமுகத்தில் விசைப்படகு நாட்டுப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தது.
புயல் கரையை கடந்த நிலையில் நேற்று பாம்பன் ரயில் தூக்குப் பாலம் பாம்பன் ரயில் பால அதிகாரிகளால் திறக்கப்பட்டு தெற்குப் பகுதியில் உள்ள விசைப்படகு நாட்டு படகுகள் அனைத்தும் பாம்பன் மண்டபம் இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
ராமன் பாலம் வழியாக விசைப் படகுகள் வரிசையாக சென்று கொண்டிருக்கும் பொழுது பெரிய ரக விசைப்படகு ஒன்று கட்டுப்பாட்டை இழந்தது சிறிய விசைப்படகு உடன் இணைந்து பாம்பன் பாலத்தில் மோதியது இதனால் படகில் பலத்த சேதம் ஏற்பட்டது.
முன்னோக்கி செலுத்தப்பட்ட அந்த விசைப்படகு தற்போது பின்னோக்கி செலுத்தப்பட்ட மீண்டும் ராமேஸ்வரம் நோக்கி சென்றது.பாலத்தில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டு உள்ளதா என்பதை ரயில்வே பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் புயல் போன்ற காலங்களில் இராமேஸ்வரம் பகுதியில் தூண்டில் வளைவு ஏற்படுத்திக் கொடுத்து இருந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் மீனவர்கள் சந்தித்திருக்க மாட்டார்கள் என்றும் புயலில் சேதமடைந்த படகுகள் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் பலத்த சேதம் ஏற்பட்டு தற்போது குந்துகால் துறைமுகத்திலிருந்து எடுக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது என்றும் மத்திய மாநில அரசுகள் கருத்தில் கொண்டுபாதிக்கப்பட்ட படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மண்டபம் பாம்பன் இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்தால் புயல் காலங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த பயனுள்ளதாக அமையும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.






