இயந்திரத்தில் சிக்கி தோலுடன் துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலைமுடியை மீண்டும் பொருத்திய மருத்துவர்கள்..!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே இயந்திரத்தில் சிக்கி தோலுடன் துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலைமுடியை மைக்ரோஸ்கோப்பி ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.
வடக்கு வீதி பகுதியில் அலுமினிய தகடு செய்யும் தொழில் செய்து வரும் விஜய் என்பவரின் மனைவி கவிதா. கடந்த 22ஆம் தேதி வீட்டு வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது தலைமுடி அலுமினிய தகடு செய்யும் எந்திரத்தில் மாட்டியது.
இதில் தலைமுடி தோலுடன் உரிந்து இயந்திரத்தில் மாட்டிய நிலையில் கவிதா படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்த மருத்துவர்கள் சுமார் 10 மணி நேரம் போராடி இயந்திரத்தில் தோலுடன் மாட்டிய தலைமுடியை மைக்ரோஸ்கோப்பி ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தியுள்ளனர்.
அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் கவிதாவிற்கு மீண்டும் தலை முடி வளரத் தொடங்கியுள்ளது.






