தேனியில் குழியில் விழுந்த 6 வயது சிறுவன் பரிதாப பலி..!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானம்பட்டி அரசு நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பில்லர் குழியில் விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது மழை நீர் தேங்கி இருந்த குழியில் கால் தடுமாறி விழுந்து விட்டான்.
மற்ற சிறுவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த அவனது பெற்றோர் மற்றும் போலீசார் குழிக்குள் தேடியபோது சிறுவன் சடலம் மீட்கப்பட்டது. இதனை பார்த்த சிறுவனின் பெற்றோர் கதறி அழுதனர்.
அரசு கட்டடத்திற்காக தோண்டப்பட்ட குழி முழுவதும் நீர் நிறைந்த நிலையில் ஒப்பந்ததாரர் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் சிறுவன் உயிரிழக்க நேரிட்டதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதில் கலைந்து சென்றுள்ளனர்.






