காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!
இன்று தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியா காந்தி ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ இறைவனிடம் பிரார்த்திப்பதாக தனது ட்விட்டர் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியும், சோனியா காந்திக்கு வாழ்த்து கூறியுள்ளார். இதைப்போல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் சோனியா காந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
விவசாயிகளின் போராட்டம் மற்றும் கொரொனா தொற்று பரவல் அபாயத்தை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கட்சியினருக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.






