திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது..!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 10 நாட்களுக்கு இரவும் பகலும் இந்த விழா நடைபெறுகிறது. பத்தாம் நாளான வரும் 29ஆம் தேதி காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
மகாதீபம் ஏற்றப்படும் நாளில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபத் திருநாளன்று பக்தர்கள் கிரிவலம் செல்லவும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.






