தமிழகத்தில் இன்று 1707 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..! 2251 பேர் டிஸ்சார்ஜ்…! 19 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1707 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 2251பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழாகவும், உயிரிழப்பும் 20க்கு குறைவாக வாகவும் பதிவாகி வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் நேற்று 1714 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று சற்று குறைந்து 1707 ஆக பதிவாகியுள்ளது. இதனால் இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7.64 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 2251 ஆகும். இன்னும் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் 13/9 07 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பால் தினசரி நிகழும் உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 18 பேர் உயிரிழந்த நிலையில் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 11,550 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 67, 115 பேரின் மாதிரிகள் சோதிக்கப்பட்டதாகவும், இதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 1.03 கோடி ஆகும். சென்னையில் இன்று 471 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.






