--- --:--:-- --

தேசிய கீதத்தின் பாடல் வரிகளை தவறாக உச்சரித்த பீகார் கல்வியமைச்சர்..!

9

தேசிய கீதத்தின் பாடல் வரிகளை தவறாக உச்சரித்ததாக பீகார் கல்வியமைச்சர் மெகாபால் சௌத்ரி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதாதள கட்சி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது.

 

மொத்தம் 38 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பதிவில் சௌத்ரி தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று தேசிய கீதத்தின் பாடல் வரிகளை சரியாக உச்சரிக்காமல் தடுமாறினார். பாரத் மாதா கி ஜே என்றும் , வந்தே என்றும் அமைச்சர் குறிப்பிட கூடியிருந்த குழந்தைகள் மாதரம் என கூறுகிறார்கள்.

 

ஆனால் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. 65 வயதான கல்வி அமைச்சர் மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon