--- --:--:-- --

நண்பனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் கொலை

11

சென்னையில் நண்பனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அயனாவரத்தை சேர்ந்த மதன் என்ற நபர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன.

 

வில்லிவாக்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மதன் அதிகளவில் மதுபானம் அருந்தியதாக சொல்லப்படுகிறது. அப்போது போதையில் தடுமாறிய மதன் 13 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

 

கொலை வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்றபோது அங்கு பழக்கமான ராஜேஷ் என்பவர் அண்மையில் இறுதி ஊர்வலம் ஒன்றில் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

 

இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ள போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon