விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக மாறுகிறதா..?
விஜய் மக்கள் இயக்கத்தை அ.இ.த.வி.ம கட்சியாக மாற்றிய விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தை கைப்பற்றி விட்ட நிலையில் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பதிவெண் இல்லாத லெட்டர் பேட் ஒன்றை விஜய்க்காக தயார் செய்து கொடுத்துள்ளார்.
இயக்க பொறுப்பாளர் சுச்சி ஆனந்த். அந்த புதிய லெட்டர் பேடில் முதல்முறையாக நடிகர் விஜய் கையெழுத்துடன் நிர்வாகிகள் மாற்று பட்டியலை சுச்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுரை, திருப்பத்தூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கேரளாவில் கண்ணூர், காசக்கோடு, கொல்லம், கோட்டயம், கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் புதிய நிர்வாகிகளின் பெயரை அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.
ஏற்கனவே அங்கு இருந்த எஸ்ஏசி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதோடு இல்லாமல் தனது புகைப்படம், கொடி இயக்கத்தின் பெயர் ஆகியவற்றை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும் என்றும், மீறினால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
விஜய்யின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகமூட்டிய நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் அத்தனை அதிகாரத்தையும் கையில் வைத்து இருக்கின்ற எஸ் ஏ சந்திரசேகரன் கட்சிக்கும், விஜய்யின் அமைப்புக்கும் ஒரே கொடி பயன்படுத்தப்படுமா அல்லது விஜய் தனது மக்கள் இயக்கத்தின் கொடியை மாற்றுவாரா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.






