--- --:--:-- --

கல்லூரி விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவரை மட்டுமே தங்க வைக்க வேண்டும்..!

12.1

ல்லூரிகள் திறக்கப்படும் போது விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவரை மட்டுமே தங்க வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

 

கொரொனா பரவலை தொடர்ந்து கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவற்றை திறப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த சூழலில் பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரி விடுதிக்கான கட்டுப்பாடுகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ளது.

 

அதன்படி கல்லூரி விடுதிக்கு வரும் மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா இல்லை என்ற சான்று இருந்தாலும் விடுதியில் பயிலும் மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

 

ஒரு அறைக்கு ஒரு மாணவரை மட்டுமே தங்க வைக்க வேண்டும் என யுஜிசி கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon