சென்னையில் 5 அடி நீள அரிய வகை கோதுமை நாகப்பாம்பு பிடிபட்டது..!
சென்னை அடுத்த அம்பத்தூரில் கொடிய விஷத்தன்மையுடன் கூடிய 5 அடி நீள அரிய வகை கோதுமை நாகப்பாம்பு பிடிபட்டது. விஜயலக்ஷ்மிபுரம் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் செட்டில் படம் எடுத்த நிலையில் நீளமான பாம்பு ஒன்று காணப்பட்டது.
இதையடுத்து பாம்பு பிடிப்பவரை அழைத்து வந்து அந்த பாம்பை பிடித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த பாம்பு செங்கல்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.






