--- --:--:-- --

54 அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனை..!

4

தமிழகத்தில் 54 அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத சுமார் 4 கோடி ரூபாய் மற்றும் 519 சவரன் தங்கம் சிக்கியுள்ளது.

 

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை 54 அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி குறிப்பிட்ட நாட்களில் போக்குவரத்து, பத்திரப்பதிவு, பொதுப்பணி, வருவாய், மாசு கட்டுப்பாடு வேளாண்மை மின் வாரியம் உள்ளிட்ட துறை அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 4 கோடியே 29 லட்சத்து 98 ஆயிரத்து 892 ரூபாய் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் 519 சவரன் தங்கம், 6 கிலோ வெள்ளி வங்கி இருப்பு விவரங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

அதிகபட்சமாக வேலூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொருளாளர் பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து3 கோடியே 58 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சம் பெற்று சோதனையில் பிடிபட்ட 16 அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon