நடிகர் முனிஸ்காந்த் மிடில் கிளாஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்..!
நகைச்சுவை நடிகர் முனிஸ்காந்த் மிடில் கிளாஸ் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். முண்டாசுப்பட்டி, மாநகரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்ற இவர் மிடில் கிளாஸ் படத்தில் எதார்த்தமான அலுவலக உதவியாளர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
தீபாவளிக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தை டோரா படத்தின் இயக்குனர் தாஸ் ராமசாமி, கே.ஜெ.ஆர் ராஜேஷ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.






