--- --:--:-- --

200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை..!

8

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்தது. அந்த மாநிலத்தில் நிவாரி மாவட்டம் பிரித்விபூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்.

 

இவரது மூன்று வயது மகன் பிரகல்நாத் விளையாடி கொண்டிருந்தபோது அருகிலிருந்த மூடப்படாத 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியை தொடங்கினார். சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவம் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

 

குழந்தையை மீட்கும் பணிகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. அந்த கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க வேண்டிய அந்த பகுதி மக்கள் இறைவனை வேண்டியபடி தவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon