--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 2487 பேருக்கு கொரோனா பாதிப்பு..! 2504 பேர் டிஸ்சார்ஜ்…! 30 பேர் உயிரிழப்பு!!

13

மிழகத்தில் இன்று 2487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2504 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் சொற்பமாகியுள்ளது இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழகத்தில் இன்று புதிதாக 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,34 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 30 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,244 ஆக அதிகரித்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று 2,504 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,04,031 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 19,154 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

இன்று 75331 பேரிடம் கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், இதுவரையிலான மொத்த மாதிரிகள்1.02 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 657 பேருக்கும், கோவையில் 220 பேருக்கும், திருப்பூரில் 122 பேருக்கும், ஈரோட்டில் 110 பேருக்கும் என மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon