மனைவிக்கு சிலை வைத்து தினந்தோறும் வணங்கும் கணவன்..!
தூத்துக்குடி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் இறந்து போன தனது மனைவிக்கு சிலை வைத்து வணங்கி வருகிறார். முடிவைத்தானேந்தலை சேர்ந்த மாடசாமி என்ற அந்த முதியவர் ராணுவத்தில் 15 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
மனைவி வள்ளியம்மாள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த மாடசாமி கடந்த 2014 ஆம் ஆண்டில் உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்த பின் எட்டு லட்ச ரூபாய் செலவில் அவருக்குச் சிலை வடித்துள்ளார்.
சிலை தனியாக இருக்க கூடாது என்பதற்காக அந்த சிலை அருகே தனக்கு ஒரு சிலையை வடித்து உள்ள மாடசாமி நாள்தோறும் காலை எழுந்ததும் மனைவியின் சிலையை வணங்கிய பின்தான் தன் வேலைகளை தொடங்குவதாக கூறுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





