சூரிய ஒளி படாமல் பறிக்கப்பட்ட தேயிலை1 கிலோ 75 ஆயிரம் ரூபாய்..!
அசாம் மாநிலத்தில் எந்திரங்கள் இன்றி முழுக்க முழுக்க கைகளாலேயே பதப்படுத்தப்பட்ட தேயிலை ஒரு கிலோ 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. திப்ருகர் மாவட்டத்திலுள்ள மனோகரி தேயிலைத் தோட்டம் இந்த விசேஷமான தேயிலையை தயாரித்துள்ளது.
இரண்டாம் தேயிலை மொட்டுக்கள் சூரிய வெளிச்சம் வரும் முன்பே அதிகாலையிலேயே பறிக்கப்படுகின்றன. இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் தேயிலை மூலம் சிறந்த நறுமணமுள்ள நன்கு மஞ்சள் வண்ண வானம் கிடைக்கிறது.
மனோகரி தேயிலை எஸ்டேட் தயாரித்த இந்த தேயிலைக்கு மனோகரி கோல்டு டீ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கௌகாத்தியில் நடைபெற்ற ஏலத்தில் இந்த தேயிலையை விஷ்ணு தேயிலை நிறுவனம் 1 கிலோ 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.






