காவல் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மோசடி செய்ய திட்டம்..!
தேனியில் காவல்துறை கண்காணிப்பாளர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி செய்ய முயற்சி நடந்துள்ளது.
தேனி குற்றப்பிரிவு காவல் துறையின் துணை காவல் கண்காணிப்பாளராக உள்ள பாண்டி செல்வத்தின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி உறவினர் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் பாண்டிச்செல்வத்தின் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளார்.
இதுபற்றி உறவினர் ஒருவர் பாண்டி செல்வத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது தனது பெயரில் முகநூல் பக்கம் மூலமாக மோசடி நடைபெறுவதை அறிந்து உடனடியாக போலியான முகநூல் கணக்கினை சைபர்கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் முடக்கியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் போலியான முகநூல் கணக்கினை தொடங்கியது ஹரியானாவை சேர்ந்தவர் என்பது இவரின் குறுஞ்செய்தியை பார்த்து யாரும் பணத்தை அனுப்புவதற்கு முன்பாக அந்த பக்கம் முடக்கப்பட்டதால் ஒரு கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





