--- --:--:-- --

தமிழக ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..! 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தந்ததற்கு நன்றி!!

11.4

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்தார். அப்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர் கால தாமதம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் தமிழக அரசே நேற்று அரசாணை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இன்று ஆளுநரும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டதால், இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

 

இதையடுத்து, உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் கொடுத்ததற்கு அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜ்பவனுக்கு சென்றார்.

 

அங்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த முதல் அமைச்சர் பழனிசாமி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார். முதல்வருடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஆளுநரைச் சந்தித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon