--- --:--:-- --

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

5.1

வட தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மதுரை மாநகர பகுதிகளிலும் சமயநல்லூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

 

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம்முத்து, காளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் குளுமையான சூழல் நிலவியது.

 

இதில் வட தமிழகம் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தர்மபுரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon